திரு. கதிரிப்பிள்ளை பொன்னம்பலம்

(இளைப்பாறிய இலங்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்)

கதிரிப்பிள்ளை பொன்னம்பலம்

தோற்றம்: 17 ஆகஸ்ட் 1943 - மறைவு: 12 ஜனவரி 2025

யாழ். ஆவரங்காலை பிறப்பிடமாகவும், நெல்லியடி மாலிசந்தி, இல-25, இராஜசிங்கம் வீதி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தையில் இறையடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை - நாகம்மா தம்பதியினரின் அன்பு புதல்வனும், 

காலஞ்சென்றவர்களான  கந்தையா - சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சசிகரன், கிருபாகரன் (கனடா), நந்தினி (கனடா), வனஜா (கனடா), தேவிகா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தசிவம் (கனடா), செந்தில்குமரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபிலக்ஷனா, கனிஷன், திவிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், நாகம்மா, சிவக்கொழுந்து, இராஜகோபால், கந்தையா மற்றும் இராசரத்தினம் (கனடா), மயில்வாகனம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பறுவதம், பொன்னம்மா (கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-01-2025 புதன்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 16-01-2025 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2025 21:59)