Mr. Kathirithambi Perampalam Annamalai
(Retired Accountant)
Date of Birth: 16 October 1932 - Deceased: 12 April 2023
யாழ். சாவகச்சேரி பெரியமாவடி பண்டிதர் க.பேரம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் அல்லாரை தெற்கை வதிவிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி பேரம்பலம் அண்ணாமலை அவர்கள் 12-04-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் பேரம்பலம் திலகவதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிதம்பரம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரி, சிற்சபேசன், மயூரன், Dr. மைதிலி, அருணா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌசல்யா, அஞ்சலா, Dr. கிருபாகரன், ஸ்ரீஅருச்சுனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கௌசி, அருண், கவின், அஜன், ஆரபி, நிலா, அஸ்வின், அவ்னி ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
Dr. தியாகராசா, காலஞ்சென்ற நடராசா, சிவயோகம், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவானந்தன், சிவராசா, சிவஞானவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, யோகாம்பிகை, சாம்பசிவம், Dr. சிவயோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Jayaratne மலர்சாலையில்(2B Elvitigala MW, Borella, Colombo-8, Srilanka) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
