திருமதி. கதிரித்தம்பி மங்கையற்கரசி
(ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகத்தர் - தெல்லிப்பழை வைத்தியசாலை)
தோற்றம்: 27 மே 1939 - மறைவு: 11 ஜனவரி 2025
யாழ். அம்பனை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை, கொழும்பு - வெள்ளவத்தை, Toronto - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. கதிரித்தம்பி மங்கையற்கரசி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி (MLT Moolai) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சோதிராஜன் (ராஜு - லண்டன்), முகுந்தன் (கண்ணன் - இலண்டன்), துஷிதா (வவா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபந்தினி (கிச்சி- கனடா) அவர்களின் பெரியம்மாவும்,
வசந்தி (இலண்டன்), சற்சொறுபவதி (தாரணி- இலண்டன்), காலஞ்சென்ற தவசீலன் (சீலன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இலண்டனைச் சேர்ந்த அருண்யா, லக்ஷிதன், மதுஷன், சுலக்ஷா, பிருந்தன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கனடாவைச் சேர்ந்த கபிசன், லக்ஷிகா, லக்ஷயா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, முத்தம்மா, சரஸ்வதி, கனகம்மா, தர்மலிங்கம் மற்றும் திருநாவுக்கரசு (இலங்கை), காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், சின்னராஜா குழந்தை மற்றும் பொற்கொடி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, பெரியதம்பி, தெய்வானை (இலங்கை), சீதாதேவி (ஜேர்மனி), இராமாயணம், ஜெயசோதி (இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-01-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
