திருமதி. கதிர்காமதம்பி தவமணிதேவி (செல்வம்)

கதிர்காமதம்பி தவமணிதேவி (செல்வம்)

மறைவு: 05 மே 2024

யாழ். கரவெட்டி மத்தி, இலகடி வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிர்காமதம்பி தவமணிதேவி அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம் - சீதேவி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கதிர்காமதம்பி (கரவெட்டி தபால்கந்தோர் அதிபர்)அவர்களின் அன்பு மனைவியும்,

பிரபா (கனடா) அவர்களின் பாசமிகு தாயாரும்,

ரூபன் (கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,

சூரியன், நிலா ஆகியோரின் அன்பு பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2024 04:00)