திருமதி கதிர்காமத்தம்பி பரமேஸ்வரி
மறைவு: 26 நவம்பர் 2023
யாழ். கொக்குவில் கிழக்கு மாத்தளை கந்தசாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிர்காமத்தம்பி பரமேஸ்வரி அவர்கள் 26-11-2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா கதிர்காமத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம் வெற்றிவேல், தங்கரத்தினம், மகாலட்சுமி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெங்காசுதன், கங்கேஸ்வரி, ஜமுனேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவப்பிரகாசம், சிவாகரன், பாலகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவாஜினி (சஞ்சு), கிரிசாந்தன், லோகப்பிரசான் (கஜன்), டிஸ்னி, அஞ்சனா, சிவராம், சுதர்சனா, சஞ்சய், தட்சாஜினி-ஜெகந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹரிசன், ஹரிரோஷகா, அஸ்வினி, அர்ச்சுதன், ஏடின், ரயான், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29-11-2023 புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் இல 6/4, பெர்னாந்து வீதி, வௌ்ளவத்தையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணியளவில் கிரியைகள் நடைபெற்று பிற்பகல் 4.00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்:- கெங்காசுதன் (மகன்)
www.tamilthakaval.org
