Mr. Kathirkamu Markandu
(ஓய்வுநிலை தபால் அதிபர்)
Deceased: 28 August 2025
யாழ்.கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், கிழவி தோட்டத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமு மார்க்கண்டு அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு - பாறுபதி தம்பதியினரின் இளைய புதல்வனும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை (சோதிடர் ஆசிரியர்)- சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை)அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன் (பிரித்தானியா), வாகீசன் (பிரித்தானியா), விஷ்ணுகாந்தன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலா, வித்தியா, மேனகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிஷன், அனுஷ்கா, யானுஷன், கனிமொழி, ஆதர்சன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பேரனாரும்,
காலஞ்சென்ற காராளசிங்கம், சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை, கந்தசாமி, கனகம்மா, மற்றும் இலட்சுமி (சின்னமணி), சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரனும்,
காலஞ்சென்ற குலசபாநாதன், திரவியநாதன், சற்குணநாதன், சிவசெல்வநாதன், குலமணிதேவி, இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
