Miss. Kemarani Masilamani

(ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்)

Kemarani Masilamani

Deceased: 25 January 2025

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், இல-8 1/5, ஹம்டன் லேன், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. ஹீமராணி மாசிலாமணி அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரினதும், காலஞ்சென்ற குழந்தைவேலு - லட்சுமி தம்பதியினரதும் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மாசிலாமணி - பத்மலோசினி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

உமா நீலவேணி, காலஞ்சென்ற ரகுந்திரநாத், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருவாரூரன், ஜயந்தன் ஆகியோரின் மைத்துனியும், காலஞ்சென்ற பத்மநாதன் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 29-01-2025 புதன்கிழமை மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2025 05:00)