திரு. கெங்காதரம் கிருபானந்தன்

கெங்காதரம் கிருபானந்தன்

தோற்றம்: 07 மே 1948 - மறைவு: 04 அக்டோபர் 2025

யாழ். இருபாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கெங்காதரம் கிருபானந்தன் அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கெங்காதரம் - வேதரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தியாகராஜா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

துஸ்யந்தி (Physiotheropist - சாவகச்சேரி வைத்தியசாலை), ரவிச்சந்திரன் (Engineer-Green Tech NSWDB), கோபாலரட்ணா (QS,Rana Construction) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயான் (RDA-TO-Pointpedro), Dr.சிவரஞ்சினி (Teaching Hospital Jaffna), சாம்பவி (Cmmercial Bank Jaffna) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாஷ்வதி, ஷஷ்டிக்குமரன், அபிஷேக், அபிநாஷ், அபிஷ்னா, சிவஏரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பரமேஸ்வரன் (பிரித்தானியா), கனகராஜா (பிரித்தானியா), தயாநிதி, Lion காண்டீபன் JP (Swasthi Enterprises), உமாசுதன் (பிரித்தானியா), ராமநிதி (பிரித்தானியா), வேதகெங்கா, நந்தினி (France) ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-10-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இருபாலை நெச்சிகாடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

டச்சு வீதி, தெற்கு கோப்பாய்,

யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2025 04:00)