திரு கெங்காதரம் சண்முகநாதன்
தோற்றம்: 08 ஆகஸ்ட் 1951 - மறைவு: 20 பெப்ரவரி 2024
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கெங்காதரம் சண்முகநாதன் அவர்கள் 20-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கெங்காதரம் - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சுகன்ஞன் மற்றும் லாவணியா, லோஜினி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,
காலஞ்சென்ற உமாதேவி மற்றும் ஞானசேகரம், சந்திரசேகரம் (புரூத்), உருத்திராதேவி, மதிவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிதரன், சசிமேனகா, சசிசுதன், சசிதீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-02-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 1.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தரவு மூலம்:- வீரகேசரி
www.tamilthakaval.org
