திரு. கேதீஸ்வரநாதன் நடராஜா
தோற்றம்: 26 டிசம்பர் 1950 - மறைவு: 02 ஜூலை 2025
யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியினை வாழ்விடமாகவும், மற்றும் தற்பொழுது இருபாலையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கேதீஸ்வரநாதன் நடராஜா அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கௌரி (ஓய்வுநிலை அதிபர் - யாழ். அனலைதீவு வடலூர் அ.த.க. வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரபாகரன் (கனடா) அவர்களின் பாசமிக்க தந்தையும்,
இராஜேஸ்வரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன், சுந்தரேஸ்வரி, காலஞ்சென்ற ஞானேஸ்வரன், ஞானசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பிரேமா, சந்தானமலர், காலஞ்சென்ற வெற்றிவேல், நந்தினி, கௌசலா ஆகியோரின் மைத்துனரும்,
சகிதா அவர்களின் மாமனாரும்,
ஶ்ரீனிகா, ஹரினிஷா, அஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வித்யா, துமிந்தன், நித்யா, கஜேந்திரன் ஆகியோரின் மாமனும்,
சிந்துஜன், நிஜந்தன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
29/9, அதிகாரி ஒழுங்கை,
பருத்தித்துறை வீதி,
கோப்பாய்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
