Mrs. Kirubainathan Vimalarani
Deceased: 19 July 2026
யாழ். காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும், குருமன்காடு - வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கிருபைநாதன் விமலராணி அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணசாமி - தெய்வநாயகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிபிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
கிருபைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனார்த்தனி அவர்களின் அன்பு தாயாரும்,
சிவநீபனின் அன்பு மாமியாரும்,
ஜெனனி, தரணி, தாரணி அகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற, ஜெயலட்சுமி, கந்தராசா, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், யோகோஸ்வரி மற்றும் சாந்தராணி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 21-07-2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தட்சாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
