Mr. Kirubakaran Selvanajaham

Kirubakaran Selvanajaham

Date of Birth: 01 September 1955 - Deceased: 08 July 2026

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கிருபாகரன் செல்வநாயகம் அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முன்னாள் விவேகானந்தா அச்சக உரிமையாளர் “அருட்கவிமாமணி” திரு வே. செல்வநாயகம் - நாகரத்தினம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு. ராமச்சந்திரன் - பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கமலநாயகி (கமலா) அவர்களின் ஆருயிர் கணவரும்,

கஜன், சித்தீசன், கிருஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Bushra வின் அன்பு மாமனாரும்,

இலியாசின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான புவனசுந்தரி (பவானி), மாலினிதேவி மற்றும் சிறீதரன் (விவேகா அச்சகம்), கிரிஜாலினி, பரிபாலினி (பிள்ளை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

குணராசன், காலஞ்சென்ற Dr. வேதநாதன், சிவகுமாரி, வரதராசா, கமலநாதன், இந்திரா, காலஞ்சென்றவர்களான சந்திரா, சிவகுமாரன் மற்றும் திலகா, யோகா, காலஞ்சென்ற செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணி முதல் 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1, இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து பிற்பகல் 2:30 மணி முதல் 4:30 மணி வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணிக்கு 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0 இல் அமைந்துள்ள North Toronto Crematorium இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2026 00:00)