திருமதி. கிருபாநிதி யோகேஸ்வரன்

கிருபாநிதி யோகேஸ்வரன்

தோற்றம்: 04 மே 1964 - மறைவு: 24 அக்டோபர் 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாநிதி யோகேஸ்வரன் அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(மலேயன் கபே ஸ்தாபகர் - யாழ்ப்பாணம்), சிவயோகம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவராம், சர்னி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிறிஸ்கந்தராஜா, தயாநிதி, சாந்தநிதி, இன்பநிதி, காலஞ்சென்ற சிறிசந்திரதாசன், சகலகலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாதன், மகேந்திரன், காலஞ்சென்ற துரைராஜா, சகுந்தலா, பிரேம்குமார், சிறிகாந்தவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/10/2021 09:09)