திரு. கிருபாநிதி கந்தையா

கிருபாநிதி கந்தையா

தோற்றம்: 17 நவம்பர் 1945 - மறைவு: 11 ஜனவரி 2025

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருபாநிதி கந்தையா அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மாரிமுத்து - ராசம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

ஜெகதீஸ்வரி (ராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜி, பிரதீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

சிவகாந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

மித்ரா, அமரன், ருத்ரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற கருணகாந்தன் நவரட்ணம், சிவகுமாரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,

காலஞ்சென்றவர்களான நித்தியானந்தம், குட்டி மற்றும் பாபு, மங்கையர்க்கரசி, காலஞ்சென்ற இம்பமணி, தனபாக்கியம், காலஞ்சென்ற மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரத்னம், நிர்மலா, பாலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம், ஞானேஸ்வரி, விஜயராஜா, தனேஸ்வரன், பத்மநாதன் மற்றும் சத்குணநாதன், மகாதேவன், காலஞ்சென்ற தனேஸ்வரி, நற்குணநாதன், சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரத்தினேஸ்வரி, காலஞ்சென்றவர்களான நடராஜா, குண்டுமணி மற்றும் தவமணி, காலஞ்சென்ற சரஸ்வதி, சீதாலட்சுமி, மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், ராணி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

பெறமக்களின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:30 - 1:30 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியவில் புகழுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2025 05:00)