Mr. Kittinan Arumaithurai

(அகில இலங்கை சமாதான நீதவான், இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட பரிசோதகர், மூத்த ஒலியமைப்பாளர்)

Kittinan Arumaithurai

Deceased: 28 July 2024

யாழ். கெருடாவில் தொண்டைமானாற்றினை பிறப்பிடமாகவும், அல்வாய்   மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  கிட்டினன் அருமைதுரை  அவர்கள் 28-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற கிட்டினன்-லட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற மாணிக்கம்-செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

இராசாத்தி அவர்களின் அன்பு கணவரும், 

காலஞ்சென்றவர்களான தங்கரட்டினம், கிளிதுரை, தங்கதுரை மற்றும்  அழகுதுரை, சுலோசனா, கிருஷ்ணகுமாரி, ஜெயராஜ், ஜெயதுரை  சூரியகலா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரம், பொன்னம்பலம் மற்றும் இரத்தினம், கிருஷ்ணபகவான், நிர்மலாதேவி, கார்த்திகேஸ்வரி, ஆஷா, மகேந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவனேஸ்வரன், பரிதினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

பிரியாந்தி, சந்தோஷ், ஜெனோஸ், தட்சியன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் மகாத்மா சன  சமூகநிலையம், கெருடாவில் விவேகானந்தா சனசமுக நிலையம் ஆகிய இடங்களில்  மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 03.00 மணியளவில்  அல்வாய் சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும் .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
 தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/07/2024 04:00)