Mr. Kochchu Sukumar

(ஓய்வுபெற்ற அம்புலன்ஸ் சாரதி)

Kochchu Sukumar

Date of Birth: 10 October 1953 - Deceased: 11 May 2026

இல- 48/169, கண்டி வீதி, விநாயகர்புரம், திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. கொச்சு சுகுமார் அவர்கள் 11-05-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கொச்சு - இரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராகவன் - அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

திரேஸ் அவர்களின் பேரன்புமிக்க கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், ரகுநாதன், பத்மநாதன் மற்றும் லக்சுமிபாய். மங்கயற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற இராசய்யா, சரஸ்வதி, நாகேந்திரன், காலஞ்சென்ற அல்போன்ஸ் பிறியட், மனோகரன், சரஸ்வதி, சதா, காலஞ்சென்ற சகாதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயகுமாரி, ஜெயகுமாரி (தாதி உத்தியோகத்தர்), சுரேஸ்குமார் (போலந்து), கோகிலகுமாரி (அமெரிக்கா), சசிகுமாரி (கனடா), சதீஸ்குமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

யோகநாதன், ஜெயரூபன், வனிதா, பிரசன்னா (அமெரிக்கா), மதிராஜ் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கரீஷ், பபிஷ்னா, நிவர்ஷனா, ஹிர்த்விகா, நித்திக்ஷன், ஹஸ்விகா, நிகேஷன், அர்ச்சனா, அபிஷனா, ஆருதன், மஹிஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-05-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 76 636 8153
+94 77 162 0209
+94 77 985 0437

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/05/2026 00:00)