திரு. கோடீஸ்வரன் கனகசபை

கோடீஸ்வரன் கனகசபை

தோற்றம்: 03 செப்டம்பர் 1968 - மறைவு: 19 ஜனவரி 2025

யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, South Wales ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோடீஸ்வரன் கனகசபை அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகசபை - பராசக்தி தம்பதியினரின் அன்பு மகனும், கந்தசாமி - துளசி அம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

குணாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

திபாகர் (வாசன்), கஜந்தினி (வாசுகி), தனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமுதினி, சுதாகரன், கோபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஹரி, அரன், ஆரண்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பரந்தாமன், ஸ்ரீஸ்கந்தராஜா , சிவனேஸ்வரன், லதாறஞ்சினி, சத்தியசீலன், கலாறஞ்சினி, கோமளறஞ்சினி, பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, தவமலர், லலிதாம்பிகை , காலஞ்சென்ற வெற்றிவேலாயுதம், சிவறஞ்சினி, யுகராஜா, சித்திரசேனன், றஞ்சினி, காலஞ்சென்ற சக்திவேல் (நோர்வே), சகுந்தலை (பிரித்தானியா), சக்தியதாசன் (சுவிஸ்), கிரீசன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

லங்காதேவி (நோர்வே), காலஞ்சென்ற அருளானந்தன் (பிரித்தானியா), சுமதினி (சுவிஸ்), தேவகி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலன் (இலண்டன்), அபிலன் (இலண்டன்), மெளனீஷன் (இலண்டன்), சதீஸ், சசிகலா, லதீஸ், லங்கேஷ், கிரிதரன், பிரதீஸ், சத்தியானந்தன், திருபானந்தன், பிறேம்குமா ர், யோகானந்தன், நகுலானந்தன், யோகேஸ்வரி, சிவசக்தி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

துவாரகா (கனடா), பிரதீப் (கனடா), பிரதுஷன் (சுவிஸ்), ஜனுஷன் (சுவிஸ்), ஹரிஷ் (இலண்டன்), துளசிகா (இலண்டன்), கஜேந்தன் (இலண்டன்), தர்மராஜா, குகேந்திரராஜா, கஜேந்திரன், கஜேந்திரராணி, சத்தியானந்தன், நிரோஜா , நிரோஜன், அனோஜன், தூயவன், றாகவன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கீர்த்திகன், கிரோஷன் தர்ஷிகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

கிரியை:-

Monday,27 January 2025, [8:30 AM - 10:30 AM]

Thornhill Cemetery and Cardiff Crematorium

Thornhill Road, Cardiff CF 14 9UA, United Kindom

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/01/2025 22:36)