Mr. Kogilan Velayutham

Kogilan Velayutham

Date of Birth: 23 September 1961 - Deceased: 30 September 2025

யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Montreal - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கோகிலன் வேலாயுதம் அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம் - புவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை - நல்லநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாலினி, நிஷாந், நிதுர்ஷன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்ற விமலதாசன், லிங்கதாசன், நளினி, புகழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுலோஜி, மயூரி, சாரூபன், அகர்ஜன், சிவர்ஜன் ஆகியோரின் மாமனாரும்,

தாரணி, செல்வராசா, ஜெயமதீஸ்வரா, கமலாம்பிகை, காலஞ்சென்ற கமலநாதன், ஜெகதாம்பிகை, லோகேஸ்வரன், சிவராஜா, நிர்மலாதேவி, பவானி ஆகியோரின் மைத்துனரும்,

கொறினா, விஜித், வீபன் ஆகியோரின் பெரியப்பாவும்,

அக்‌ஷயன், ஆத்விக், இனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 - 12.00 மணி வரை Rideau Funeral Home (4275 Boul des Sourcs, Dollard - Des - Ormeaux, QX, H9B 2A6) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2025 04:00)