Mrs. Konesapillai Maheshwariyamma
Date of Birth: 26 November 1939 - Deceased: 02 July 2026
திருகோணமலை - கட்டைபறிச்சான்- தெற்கு சேனையூரைப் பிறப்பிடமாகவும், கட்டைபறிச்சான்- 04ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கோணேசபிள்ளை மகேஸ்வரியம்மா அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற கோணேசபிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தா (ஓய்வு நிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளர்), ருத்திரகாந்தன் (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற விக்னேஸ்வரன், உமாதேவி (ஆசிரியை- தி/மூ/சேனையூர் மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இந்துமதி (ஓய்வுநிலை இலிகிதர்), சிவனேஸ்வரி (ஆசிரியை- தி/மாதுமையம்பாள் வித்தியாலயம் திருகோணமலை) ஆகியோரின் மாமியாரும்,
தனோஜன் (இலத்திரனியல் மென்பொருள் பொறியியலாளர்), ரேணுகாந் (பொறியியல் பீடம்- கிளிநொச்சி), ஜதுசனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 05.00 மணியளவில் திருவுடல் கட்டைபறிச்சான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
