Mrs Krishnamma Punniyarajaha
Date of Birth: 09 April 1942 - Deceased: 01 May 2024
பண்டாரவளை, லியங்காவளையைப் பிறப்பிடமாகவும், கெரவலப்பிட்டிய, வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணம்மா புண்ணியராஜா அவர்கள் 01-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியலிங்கம் பிள்ளை - மீனாம்பாள் தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற புண்ணியராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
புண்ணியராணி, லுவேந்திரன், காலஞ்சென்ற ஞானசேகரன், ரமேந்திரன், சந்திரசேகரன், தமயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ரவிசேகரன், சசிகலா, பிரிஜட் சுதர்ஷினி, ஹில்டா ஶ்ரீராணி, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பத்மாஷீனி (ஷர்மி), சஜீவன், ஹரிஷ், சாருஷன், பபிதா, டிலுக்ஷினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அகிலேஸ்வரன், பிரியதர்ஷீனி, சகானா (Shegga), எரிக் ரொஷான், சுலோக்ஷன், இவோன் ரெனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
யுனை யஷ்வோனின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 04-05-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.15 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
