திருமதி. கிருஷ்ணமூர்த்தி சந்திராதேவி
மறைவு: 09 மே 2024
யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணமூர்த்தி சந்திராதேவி அவர்கள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கிருஸ்ணமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன், மைதிலி, பாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மணிவிழி, இந்திரகுமார், கலைவண்ணன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிஷாந், ரவிஷாந், நிந்துயா, சர்வின், கிருஷ்வின், லக்ஷ்வின், அபிநாத் ஆகியோரின் பேர்த்தியும்,
வசந்திராதேவி, ரமணன், ஹீதரன், பிரபாகரன், காலஞ்சென்ற சசீந்திராதேவி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பூமணி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற கண்மணி, அகிலாண்டேஸ்வரி, செல்வராணி, செல்வராசா, செல்வநாயகம், சந்திரசேகரம், சற்குணராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-05-2024 இறுதிக்கிரியைகள் காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் Forest Lawn Mausoleum & Cremation Centre (4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada) இற்கு எடுத்து செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/05/2024 04:00)
