திரு. கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் (குமார்)
தோற்றம்: 10 ஜூலை 1967 - மறைவு: 04 செப்டம்பர் 2025
யாழ். புங்குடுதீவு 01ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல-60, அல்விஸ் பிளேஸ், கொட்டாஞ்சேனை கொழும்பு -13 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஸ்ணமூர்த்தி கிருஸ்ணகுமார் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணமூர்த்தி - புவனேஸ்வரி (மணி) தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் (ஓய்வுபெற்ற தபால் அதிபர் - இருப்பிட்டி, புங்குடுதீவு - 5) - தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
நேசயோகா அவர்களின் அன்புக் கணவரும்,
பபிலோஜன் (I.C.T Teaching College of Education, Nuwanpura), சஞ்ஜீவன் (சம்பத் வங்கி, கொட்டாஞ்சேனை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுரேஸ்குமார் (நோர்வே), காலஞ்சென்ற கிருஸ்ணலதா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தவயோகநாதன் (யோகு - கனடா), சியாமளா (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பகிதரணியின் (கனடா) சகலனும்,
சுவாதி, சுவேக்கா, சுஜீவன் (நோர்வே) ஆகியோரின் பெரியப்பாவும்,
ராமின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
