Mr. Krishnapillai Krishnarajah

(இளைப்பாறிய பிரதம இலிகிதர் - இலங்கை மின்சார சபை, நிர்வாக உத்தியோகத்தர் - வதிரி ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லம்)

Krishnapillai Krishnarajah

Date of Birth: 23 November 1951 - Deceased: 06 December 2025

யாழ் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கு அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணராசா (இளைப்பாறிய பிரதம லிகிதர் இலங்கை மின்சாரசபை நிர்வாக உத்தியோகத்தர், ஸ்ரீ பரமானந்த சிறுவர், முதியோர் இல்லம்) அவர்கள் 06-12-2025ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான   கிருஷ்ணபிள்ளை - மாணிக்கம் தம்பதியினரின் மகனும், புண்ணிய மூர்த்தி - பரமேஸ்வரி  தம்பதியினரின் மருமகனும்,

பவானி அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தாபன் (அஞ்சல் அதிபர் - சுன்னாகம்), செந்தூரன் (Shiradi Engineerings (PVT) Ltd), நிலானி (நிறைவேற்று அதிகாரி அகரம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரணவனின் (Smart Construction Management நிறுவனர்) சிறிய தந்தையும்,

சுகந்தி (ஆசிரியர்- யாழ். கரணவாய் தாமோதர வித்தியாலயம்), சாயிசரணியா (வங்கி உத்தியோகத்தர் சம்பத் வங்கி - மானிப்பாய் கிளை), அனோஜன் (பொறியியலாளர் ) ஆகியோரின் மாமனாரும்,

கிருஷ்ணானந்தன், காலஞ்சென்ற  கிருஷ்ணதேவி, கிருஷ்ணகுமார், கிருஷ்ணபாலன், கிருஷ்ணயோகன், கிருஷ்ணாகரன் (முன்னாள் அதிபர் - மாணிக்கவாசகர் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆச்சிரம வீதி, நெல்லியடி, கரவெட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/12/2025 02:37)