திருமதி. கிருஷ்ணபிள்ளை இராசம்மா
தோற்றம்: 05 அக்டோபர் 1939 - மறைவு: 06 ஜனவரி 2025
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கிருஷ்ணபிள்ளை இராசம்மா அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி-சோதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சரவணர்-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணகுமார், ராஜகுமார், சிவக்குமார், ரவிக்குமார், சுகாசினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் 07-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
