Mr. Krishnapillai Sivakumar

Krishnapillai Sivakumar

Date of Birth: 21 September 1963 - Deceased: 08 July 2025

யாழ். கரவெட்டி மேற்கு, விக்னேஸ்வரா கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி நல்லூர் வீதியை வாழ்விடமாகவும், சிட்னி - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை சிவகுமார் அவர்கள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை - தெய்வானை தம்பதியினரின் மகனும், இயன் ஜேக்கப் - எஸ்த்தர் தம்பதியினரின் மருமகனும்,

ஜெயரஞ்சி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜேன் விமலின் பாசமிக்க தந்தையும்,

ரவிகுமார், உமாதேவி, விஜயகுமார், காலஞ்சென்ற ராஜ்குமார் ஆகியோரின் சகோதரரும்,

மேரி சாமுவேல் (இலண்டன்), காலஞ்சென்றவர்களான பாஸ்டர் ராஜன், அல்பிரட் மற்றும் சோதி (அவுஸ்திரேலியா), பாஸ்டர் செல்வராஜ், ஜெகன், ஜெனி (கட்டார்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியா நேரம் பிற்பகல் 3:00 மணியளவில் (186, Heartly, Smeaton Grange NSW 2567, Sydney, Australia) இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2025 04:00)