திரு. கிருஷ்ணர் நாகராசா
(பிரபல சோதிடர்)
தோற்றம்: 05 ஜூன் 1945 - மறைவு: 25 அக்டோபர் 2025
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முத்தையன்கட்டு கணேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணர் நாகராசா அவர்கள் 25-10-2025 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணர் - தங்கமுத்து தம்பதியினரின் மூத்த புதல்வரும்,
சங்கரப்பிள்ளை ராஜலட்சுமி (அச்சுவேலி), காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணர் தங்கலட்சுமி (இலண்டன்), பாலசிங்கம் (ஆங்கில ஆசிரியர், மன்னார்), டாக்டர் சிவபாலசிங்கம் (இளைப்பாறிய மாகாண பணிப்பாளர், அச்சுவேலி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சோதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஷினி (முத்தையன்கட்டு), பகீரதன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா), நவநீதரன் (சுவிசர்லாந்து), காலஞ்சென்ற பத்மாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகுமார், சித்தாரா (ஆசிரியை - வவுனியா மதினா வித்தியாலயம்), ஐஸ்வரியா (சுவிசர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மேனகன், திணாந்தன், துவாரகா (யாழ். பல்கலைகழகம்), பிரியங்கன் (கிழக்குப் பல்கலைகழகம்), சியாத், ஆசாத், தஸ்வின், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-10-2025 திங்கட்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று திருவுடல் பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
