டாக்டர். கிருஷ்ணர் பசுபதி
தோற்றம்: 23 ஆகஸ்ட் 1925 - மறைவு: 22 டிசம்பர் 2025
மலேசியா - Seremban யைப் பிறப்பிடமாகவும், Kuching, கொழும்பு, யாழ். சுழிபுரம், பிரித்தானியா - இலண்டன், கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணர் பசுபதி அவர்கள் 22-12-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் கிருஷ்ணர் - பொன்னம்மா ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Dr.சோமசுந்தரம் ஐயம்பிள்ளை - சின்னம்மா கந்தபர் வேலாயுதா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பத்மாவதி சோமசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீபதி, நிர்மலா, ரேணுகா, கணேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவராணி, Dr.ஜெயபாலன், லட்சுமணன், ஆமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணவதி, செல்வதி மற்றும் திலகவதி, காலஞ்சென்றவர்களான சிவபதி, புஷ்பாவதி மற்றும் புனிதவதி, Dato Dr.ரகுபதி, பரம்பதி, பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கமலம், ஞானம், Dr.சிவசுந்தரம், ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகன்-Dr.வித்யா, ஜீவனா-ஈசன், நவீனா-ரூபன், திவ்யா-அஹிலன், த்ரிஷ்னா, சந்தியா-ஜக்நீஷ், Dr.சரண்யா, தன்யா, ஹரிபதி, நிவேதிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தயாளன், செரீனா, தில்லன், தீரன், மயூரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 - 2:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
