திரு. கிருஷ்ணசாமி நவரட்ணம் நாயுடு

(உரிமையாளர்- மம்மி டெடி (NCC) பதுளை)

கிருஷ்ணசாமி நவரட்ணம் நாயுடு

தோற்றம்: 25 மே 1951 - மறைவு: 13 செப்டம்பர் 2024

பதுளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணசாமி நவரட்ணம் நாயுடு அவர்கள் 13-09-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ரவி தாரகை அவர்களின் அன்புக்கணவரும்,

காலஞ்சென்ற ரஜிதரன், ரஜித்திரகுமார், ரவிவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இலக்கியா, கிரோஷா ஆகியோரின் மாமனாரும்,

எரோனின் தாத்தாவும், 

காலஞ்சென்ற ராமச்சந்திரன், ஆறுமுமகம், கோடீஸ்வரன், பத்மநானத் (K.P.N), பன்னீர்செல்வம், சாரதாம்பாள், தங்கராணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-255/8, லோவர் வீதி, பதுளையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு், 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர் ‎

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/09/2024 04:00)