திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலலிங்கம் அகிலேந்திரன் அவர்கள் 27-03-2024 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், குலலிங்கம் - யோகரஞ்சினி தம்பதிகளின் செல்வப் புதல்வனும், சுந்தரேஸ்வரன் - செல்வராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுதர்சிகா அவர்களின் பாசமிகு கணவரும்,
அக்ஷயன் (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), அனிகா (இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), அஷ்வர்தன்(வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நவீந்திரன், சுயீந்திரன் (நெதர்லாந்து), பாலேந்திரன் (கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவராசா (பிரான்ஸ்), பிரியதர்ஷினி (வட்டக்கச்சி மத்திய கல்லூரி), கயல்விழி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதாஸ்கரன் (அதிபர்- கிளி / இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலை ), சுகந்தினி (பிரான்ஸ்), சுதர்சன் (பிரான்ஸ்), கிருசா (கனடா ), தவயோகினி (நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
டானிக்கா, சுருதி, துர்வா, யாஷினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜானவி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
உபநிஷை, மலரவன், அமலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் இறுதி வணக்க நிகழ்வுகள் நடைபெற்று, வவுனியா பொது வைத்தியசாலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2024 04:00)

