ஶ்ரீமதி. குகன் வாசுகி
மறைவு: 01 செப்டம்பர் 2026
யாழ். காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி - இயக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குகன் வாசுகி அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காரைநகர் மணற்பிட்டி கந்தசாமி கோவில் பரம்பரை பூசகரான தெண்டாயுதபாணி - தெய்வானை தம்பதியினரின் அன்பு மகளும்,
இயக்கச்சியை சேர்த்த குகன் ஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற குமார் ஐயா, தேவகி அம்மா, சந்திரா அம்மா, சோமய்யா (மணற்பிட்டி முருகன் கோவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கல்யாணி, கௌசீகன், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
