(Sunday, November 9th at 12 noon. Sri Lanka Time)

Mrs. Kuganeswary Sivasaranam

Kuganeswary Sivasaranam

Date of Birth: 12 March 1934 - Deceased: 07 November 2025

யாழ். வேலணை மேற்கு, சிற்பனை 06ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு 08ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், இல-541/2, காலி வீதி, வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகனேஸ்வரி சிவசரணம் அவர்கள் 07-11-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை சிவபதமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா - சுந்தரம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசரணம் அவர்களின் அன்பு மனைவியும்,

கருணநாதன் (ஜேர்மனி), காலஞ்சென்ற குகநாதன் (Maharaja Foods & G.T.V. Enterprises), ஞானசக்தி (விகடன் பிரிண்டர்ஸ்), திருநாதன் (இலண்டன்) ஆகியோரின் தாயாரும்,

கலைமணி (ஜேர்மனி), தவமலர், தயாபரன் (ஓய்வுநிலை நீதிமன்ற உத்தியோகத்தர், விகடன் பிரிண்டர்ஸ்), சிவகலை (இலண்டன்) ஆகியோரின் மாமியாரும்,

சிவகஜன் (ஜேர்மனி), சிந்துஜன் - சுவன்யா (ஜேர்மனி), யதீசன் - லக்ஷனா (ஜேர்மனி), விஜயானந்த் (Maharaja Foods & G.T.V. Enterprises) -  மித்ரா, வித்தியநாத் (Maharaja Foods & G.T.V. Enterprises), கோகுல்நாத் (இலண்டன்), சட்டத்தரணி நர்மதா - கலாமோகன் (அருந்ததி (பிரைவெட்) லிமிடட், Dr. விச்வநேத்திரன் - நிரோஜினி (சட்டவிரிவுரையாளர் - அவுஸ்திரேலியா)  நிவேதா - நந்தகுமாரன் (Associate Engineering Manager - Virtusa (Pvt) Ltd), சகிஷ்ணா (Solictor - இலண்டன்), ஸ்ருதி (Biomadeical Engineer - இலண்டன்), சாரகா (Depositary Manager - இலண்டன்) ஆகியோரின் பேத்தியும்,

வேல் (ஜேர்மனி), ஆதியா, அப்சரா, அட்சயன், நேத்ரா (அவுஸ்திரேலியா), உத்திரா ஆகியோரின் பூட்டியும்,

காலஞ்சென்ற விஸ்வநாதன், இராசலட்சுமி, மோகனதாஸ் (சிவசக்தி ஸ்டோர்ஸ், செட்டித்தெரு), சரஸ்வதி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பகவத்சிங்கம் அவர்களின் அண்ணியாரும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, கனகரத்தினம், ரதி, சரவணபவானந்தன் ஆகியோரின் மைத்துனியும்,

மகேஸ்வரியின் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழவுகள் 08-11-2025 மற்றும் 09-11-2025 ம் திகதிகளில் திருவுடல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2025 00:00)