Mrs. Kugathas Puwaneshwary

Kugathas Puwaneshwary

Date of Birth: 16 April 1954 - Deceased: 01 July 2025

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இல-526, ஏகாம்பரம் வீதி, திருக்கடலூர், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குகதாஸ் புவனேஸ்வரி அவர்கள் 01-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலகுருசாமி - அன்னராணி அம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசுந்தரம் - மணிமேகலை அம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குகதாஸ் (சிறைச்சாலை உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

தனலட்சுமி, ஜீவ அன்னலட்சுமி, சதீஸ்வரன், விஜயலட்சுமி, ததீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கவடிவேல், சுரேஸ், காயத்திரி, சசிகுமார், ஜீவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மராணி, பாலராணி , பாலச்சந்திரன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,

ஸ்ரீ கண்ணன், நாகேஸ்வரன், காலஞ்சென்ற யோகலட்சுமி, சிவதாஸ், ரவித்திரவதனா, இந்திரதாஸ், மதனதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குருதரன், சசிதரணி, விஜயசாந்தி, சுரேந்தினி, சுகேதன், சுஜீவன், சாய் வர்ஷா, சாய் அனுஷா, சாய் ரக்ஷா, லாரண்யா, பிரவினாஸ், கவிதாஸ், பவிஷாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தியா, யாழினி ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-07-2025 வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/07/2025 04:00)