Mrs. Kulanthaivadivel Manonmani

Kulanthaivadivel Manonmani

Date of Birth: 10 February 1942 - Deceased: 21 November 2026

திருகோணமலை கட்டைபறிச்சான் 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கட்டைபறிச்சான் 7ஆம் சாலையூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குழந்தைவடிவேல் மனோன்மணி அவர்கள் 21-11-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை - பாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற குழந்தைவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

பரிமளகாந்தி, நந்தகுமார், சுந்தரகுமார், காலஞ்சென்ற சித்திராதேவி (குடும்ப நல உத்தியோகத்தர்), சூரியகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் (ஓய்வுநிலை அதிபர்), மல்லிகாதேவி, தமயந்தி, காலஞ்சென்ற நேசராசா, சாரதாதேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவாந்தினி (இலண்டன்), தாசன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) தீபன் (ஹட்டன் நெசனல் வங்கி), துவாரகா (கனடா), துவாரகன், சாருஜன், சாருஜா, சதுர்ஜினி, அபினயா (கனடா). சுஜன், சுஜா, கிருசாந்தன் (இலண்டன்), நிவேதிகா (ஆசிரியை - தி/மூ/கடற்கரைச்சேனை அ.த.க. வித்தியாலயம்), சுதர்சன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டன்யா (இலண்டன்), லாவண்யா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

நாகராசா, காலஞ்சென்ற கமலாதேவி, திலகராணி (ஓய்வுநிலை ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, காலஞ்சென்ற வீரசிங்கம், இரத்தினகுமார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, சோமநாதி, சிவகுமார், பாக்கியம், பொன்னம்மா, மாணிக்கம், செல்லம்மா., லட்சுமிப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் கட்டைபறிச்சான் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2026 00:00)