திரு. குழந்தைவேலு கந்தையா
(ஓய்வுபெற்ற ஆசிரியர்- வீமன்காமம் மகாவித்தியாலயம், மாவிட்டபுரம்)
தோற்றம்: 15 மார்ச் 1925 - மறைவு: 28 ஜனவரி 2022
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, துபாய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குழந்தைவேலு கந்தையா அவர்கள் 28-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு செல்வம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா கெளரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரசேகரன், ரஞ்சனி (கனடா), காஞ்சனா (கனடா), அரவிந்தன் (துபாய்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலாஈஸ்வரன் (கனடா), பாலமுரளி (கனடா), தர்மினி (துபாய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷன், அருண், துளசி, காருண்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-02-2022 வியாழக்கிழமை அன்று ப.பி 04:00 மணியளவில் துபாயில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
www.tamilthakaval.org
