Mr. Kulasingam Dhilipkumar

Kulasingam Dhilipkumar

Date of Birth: 13 November 1975 - Deceased: 09 January 2026

யாழ் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடா, Toronto வை வதிவிடமாகவும் ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவனுமாகிய திரு. குலசிங்கம் திலீப்குமார் அவர்கள் 09-01-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை கனத்த இதயத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் பாடசாலையிலும் பின்னர் தனது இடைநிலைக்கல்வியை ஹாட்லிக்கல்லூரி மற்றும் கொழும்பு இந்துக் கல்லூரியிலும்  பயின்றார்.
 
பாடசாலை காலங்களில் அவர் ஒரு மிகச்சிறந்த மாணவனாகவும், கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரனாக திகழ்ந்தார்.
 
மேலும் மிருதங்கம், சாரணியம், முதல்உதவி என பல துறைகளிலும் அவரது திறமையினை வெளிப்படுத்தி இருந்தார்.
 
மது நாட்டின் அசாதாரண நிலைமை காரணமாக அன்னார் 1995ம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்து அவரது உயர்கல்வியினை University of Ottawa வில் Computer Engineering ல் இளமானிப்பட்டத்தையும், University of Toronto ல் MBA  பட்டத்தினையும் பெற்று ACTO என்ற தனியார் நிறுவனத்தில் Vice President  ஆக பதவி வகித்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற குலசிங்கம் மற்றும் பத்மினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
 
அன்னார் அவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும், நண்பர்களாகிய எங்களையும் விட்டு 09-01-2025ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு அவர் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை வடமராட்சி 91 மாணவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
 
ன்றி

தகவல்:- Colombo Hindu College, Bamabalapitiya - A/L 94 Batch (Maths)
 
Viewing Details:-

When:-
 
Saturday, January 17,2026
5:00 PM - 9:00 PM
 
Where:-
 
Ajax Crematorium & Visitation Centre
384, Finley Avenue
Ajax ON L1S 2E3

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2026 03:07)