Mr. Kulasingam Sinnathamby

Kulasingam Sinnathamby

Date of Birth: 27 December 1935 - Deceased: 30 November 2025

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுப்பையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

இராசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சிவஞானரட்ணம், சந்திரசேகரம், பரிமளகாந்தி, வன்னியசிங்கம் மற்றும் சரஸ்வதி (சரசு - கனடா), லீலாவதி(நீலம்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

இளங்கோவன், அகிலன், காண்டீபன், கலைமதி, கலைவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிரோசன், சன்ஜீவ், யதுசன், யதீசன், யாழினி, லக்சன், வர்சிகா ஆகியோரின் அப்பப்பாவும்,

வினிஜா, வினோதன், வர்சா, கஜன், விஷ்ணு ஆகியோரின் அம்மப்பாவும்,

லிசா, கவிதா, மாலினி, சுதாகரன், காந்தன் ஆகியோரின்ன் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 -  9:00 மணி வரையும், 03-12-2025 புதன்கிழமை காலை 9:00 - 10:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/12/2025 00:00)