Mrs. Kulasingham Selvachsaraswathy

Kulasingham Selvachsaraswathy

Deceased: 09 July 2025

முல்லைத்தீவு - 7ம் வட்டாரம் புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குலசிங்கம் செல்வச்சரஸ்வதி அவர்கள் 09-07-2025 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - செல்முத்து தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - கண்ணகை தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகமணி, பாக்கியம், அழகேந்திரராசா, காலஞ்சென்ற புவிராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மனோன்மணி, கிட்ணபிள்ளை, இரத்தினசபாபதி, திருசெல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனினும்,

கனகேஸ்வரி, விஜயலக்ஷ்மி, மகேஸ்வரி, சத்தியசீலன், யாகசீலன், அமுதசீலன், லோகசீலன், தர்மசீலன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

பேரின்பநாயகம், ஆனந்தசிவம், கெங்காதரன், சுபாசினி, சாந்தி, சூரியகலா, மதிவதனா, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருபாலினி, தர்சன், ஜனதர்சன், காலஞ்சென்ற ஹம்சனா, இமாரதி, சுவர்ணா, விதுர்ணன், தேனுகா, வென்சியா, விதுலன், சுவாதி, வான்மதி, வளர்மதி, உருத்திரன், சதிகரன், திரிஷா, ரித்வி, நயந்தி, ஜெகதி, விலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் உடலம் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2025 04:00)