திரு. குலவீரசிங்கம் முருகதாஸ்
(ஓய்வு நிலை உத்தியோகத்தர் நீர்ப்பாசன திணைக்களம் - கிளிநொச்சி, குயின்ஸ் Travel உரிமையாளர் கிளிநொச்சி)
தோற்றம்: 05 ஜூன் 1963 - மறைவு: 11 மார்ச் 2025
யாழ். புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 56/3, திருவையாறினைப் நிரந்தர வசிப்பிடமாகவும், இல- 154, A9 பிரதான வீதி, இரணைமடு திருமுறிகண்டியினை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குலவீரசிங்கம் முருகதாஸ் அவர்கள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பரஞ்சோதி - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜெயலதா அவர்களின் பாசமிகு கணவரும்,
விமலராணியின் அன்புச் சகோதரரும்,
திவாகர் (அருள் முருகன் Agro Center - கிளிநொச்சி), பார்த்தீபன் (குயின்ஸ் Travel - கிளிநொச்சி), டிஷாந்தினி (ஆசிரியை - மாங்குளம் மகா வித்தியாலயம்), தட்சாயினி (World vision - கிளிநொச்சி), மதுசாயினி (மாணவி - திறந்த பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரேணுகா (MPCS - பண்டத்தரிப்பு), தினோஜன் (மருத்துவ பிரதிநிதி - வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவீஷனின் பாசமிகு பேரனும்,
ஜெயக்குமார், இராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-03-2025 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பொன்னகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
