Mrs Kumaran Adhilatchumi (Rani)
Date of Birth: 28 February 1949 - Deceased: 10 May 2024
கண்டி கலஹாவைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமரன் ஆதிலட்சுமி அவர்கள் 10-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுசிலா, பரமேஸ்வரி, முரளி, ஶ்ரீதர் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சதானந்தன், ராமராஜ், சர்மிளா, நிலாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தீபிகா, பிரஷன்யா, ரேஷினி, கிருஷோனின்னா, லக்ஷன் ராகவேந்திரா, இரேஷ்குமார், யதுபிரியதர்ஷினி, பிரதிக்ஷா, பிரியசகி, கோஷன்யாகௌஷிகா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 36/2, பெனிதுடுமுள்ள, 3ம் ஒழுங்கை, நாவலப்பிட்டி இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பவ்வாகம பொது மயனாத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
