திரு குமாரசுவாமி ஆசை

(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்)

குமாரசுவாமி ஆசை

மறைவு: 26 பெப்ரவரி 2024

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், Scarborough கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசுவாமி ஆசை அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசை - தங்கச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிநாத் (அமெரிக்கா), இந்துமதி தெய்வேந்திரன் (இலங்கை), சுமதி சேரலாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி மகாலிங்கம், குருகுல சிகாமணி, அரியரத்தினம் குமாரசந்திரன், தியாகராஜா (இலங்கை) ஆகியோரின் அருமை சகோதரரும்,

மாஜரே, தெய்வேந்திரன், சேரலாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பெத்தனி, கார்ததிகா, விதுஷன், மதுராந்தகன், மதுராந்தகி ஆகியோரின் அருமை பேரனும்,

கியாரா, பேபி ஆகியோரின் ஆசைப்பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக Chapel Ridge Funeral Home & Cremation Centre  8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada இல் 28-02-2024 புதன்கிழமை மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு.

 
29-02-2024 வியாழக்கிழமை பிற்பகல் 1.30 முதல் 2.30 வரை மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டு பிற்பகல் 2.30 - 4.30 வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணிக்கு  12492 Woodbine Ave, Gomley, ON L0H 1G0, Canada அமைந்துள் Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"ஓம் சாந்தி சாந்தி சாந்தி"

தரவு மூலம்:- முகநூல்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2024 05:00)