திரு. குமாரசாமி செல்வகுமாரசிங்கம் (ரவி)

குமாரசாமி செல்வகுமாரசிங்கம் (ரவி)

தோற்றம்: 14 நவம்பர் 1958 - மறைவு: 26 ஜனவரி 2026

யாழ். உடுப்பிட்டி விறாச்சியைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி செல்வகுமாரசிங்கம் அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி - சிவயோகரத்தினம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை - இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,

அல்வாயைச் சேர்ந்த கெங்காதேவி (கெங்கா-கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரி, தக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பேரின்பமலர் (சௌந்தரி), செல்வானந்தராஜா (மகேன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகம் (Auditor), ஜெகநாதன் (ராசன்), சகுந்தலா, காலஞ்சென்ற மல்லிகாதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

சிவராசா (பிரான்ஸ்) அவர்களின் சகலனும்,

பிரதீபா (அமெரிக்கா), விஜிதா (பிரித்தானியா), தயாளினி (இலங்கை) ஆகியோரின் சின்ன இளையமாமனாரும்,

நவநீதன் (பிரித்தானியா), ரேணுகா (பிரான்ஸ்), நிரோஜா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,

சிவாஜினி (றூபி- பிரித்தானியா), கோடீஸ்வரன் (சதீஸ்-பிரான்ஸ்), ஜனந்தன் (பிரான்ஸ்), சசிக்குமார் (பிரித்தானியா), துஷ்யந்தன் (அமெரிக்கா), அமுதன் (இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும்,

லிபுசன் (பிரித்தானியா), அனிஸ், Dhanesh, கிஷோர் (பிரான்ஸ்), Seyon, Dharun (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-01-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-02-2026 திங்கட்கிழமை காலை 9:00 - 12:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2026 00:00)