திரு குமாரசாமி சிவஞானம்
மறைவு: 28 செப்டம்பர் 2026
யாழ். வடமராட்சி நெல்லியடியை பிறப்பிடமாகவும், சோளங்கனை வாழ்விடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி சிவஞானம் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலம் சென்ற குமாரசாமி செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மகனும், காலம்சென்றகளான முருகேசு சிவபாக்கியம்(சோளங்கன்) ஆகியோரின் மருமகனும்,
சாரதாதேவி (சாரதா) அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஜெனகன், சாதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,
துளசி, மக்ஸ் ஆகியோரின் மாமாவும், வீரா அவர்களின் பாட்டாவும்,
காலம்சென்றகளான நவரத்தினம் (வெள்ளையண்ணா), சிவபாதம், சிவயோகம் (சிவம்), இந்துமதி (தவம்) ஆகியோரின் சகோதரரும்,
அமரர் கதிர்காமதம்பி மற்றும் யோகேஸ்வரி, வள்ளிப்பிள்ளை, காலம்சென்ற ரதி , சகுந்தவாதேவி, விமலதாசன் (விமலன்), கணேசதாசன்(செல்வம்) ஆகியோரின் மைத்துனரும்,
யோகனாதன் அவர்களின் சகலனும், நளாயினி, செல்வமலர் அவர்களின் சகலையும்.
வினோதினி, அனுஷ்யா, சிந்து, நிரோஷினி ஆகியோரின் சின்னைய்யாவும்,
அகிலன், ரஜனி ஆகியோரின் மாமாவும், சிந்துஷன் சிந்துகா ஆகியோரின் பெரியப்பாவும்,
மோகனதாஸ் விதுசா, தமிழினி, யாழினி தர்மினி ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
