திரு. குமாரசாமி சுப்பிரமணியம்

(ஓய்வு பெற்ற கூட்டுறவு பரிசோதகர்)

குமாரசாமி சுப்பிரமணியம்

தோற்றம்: 12 டிசம்பர் 1945 - மறைவு: 16 ஆகஸ்ட் 2026

யாழ். சங்கத்தானை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சங்கத்தானை, உசன், கனடா - Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. குமாரசாமி சுப்பிரமணியம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், பொன்னம்பலம் (ஓவசியர்) - புனிதவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

தக்‌ஷாயினி, தக்‌ஷானந், காலஞ்சென்ற சுபானந், சுபாஷினி, கஜானந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாதம், தேவயோகினி, காலஞ்சென்றவர்களான சிவலோகநாயகி, செல்வேந்திரன் மற்றும் பரிமளா காந்தி, சுகிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாநிதி, செந்தில்மதி, பூங்கோதை, பரஞ்சோதி, வைத்தீஸ்வரன், சரோஜினி, கேதீஸ்வரன், Arbon ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலகுமாரன் மற்றும் சனார்த்தனா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெகன், நிர்மலன், தன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அக்சியா, அனன்யா, அம்ரிதா, பிரனிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-08-2026 செவ்வாக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 19-08-2026 புதன்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2026 00:00)