திரு. குமாரசாமி தங்கவேலாயுதம்
மறைவு: 21 செப்டம்பர் 2025
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், கருவேலங்கண்டலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசாமி தங்கவேலாயுதம் அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞசென்ற செல்லத்துரை - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஜினி, சுகந்தினி, காலஞ்சென்ற சுதாகரன், சுசிதினி ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
சந்திரூபன் (தம்பியன்), நீலகண்டன், காந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சண்முகம், சரஸ்வதி, வேலாயுதபிள்ளை, அன்னலட்சுமி, அருந்தவம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பபிதன், சோகிதன், ஜனனி, அக்ஷயன், ரஷானி, சரண்யா, கவிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று கருவேலங்கண்டலில் உள்ள மருமகனான தம்பியன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் மானுருவி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
