திரு. குமாரசிங்கம் சிவயோகநாதன்

குமாரசிங்கம் சிவயோகநாதன்

தோற்றம்: 03 மார்ச் 1953 - மறைவு: 14 ஆகஸ்ட் 2024

வவுனியா செட்டிக்குளம் நெடுங்கரைசேனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரசிங்கம் சிவயோகநாதன் அவர்கள் 14-08-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா குமாரசிங்கம் (ஐயாத்துரை)-பார்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-ஞானம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மரியா ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜூனிட்டா (கமலினி), காலஞ்சென்ற கல்பனா, கலாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சொலமன், ரூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கவீனா, நோவா, ஆரியா, தியா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

விமலநாதன், கணேசநாதன், ரகுநாதன், ஜெகநாதன், காலஞ்சென்ற நாகேஸ்வரன் (ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜினி, இந்துமதி (ஆசிரியர்), மலர்விழி, சியாமலா, கலைவாணி(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேரி மார்கிரட், காலஞ்சென்ற யேசுதாசன் (ஆசிரியர்), மேரி திரேசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சவுந்தரநாயகம், இவாஞ்சலின் (வசந்தி), யோகநாதன் (ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-08-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-08-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00-11.00 மணி வரை இறுதி ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 11.45 மணியளவில் புகழுடல் Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2024 04:00)