Mr. Kumarathas Shanmugarasa (Kumaran)
Date of Birth: 14 August 1977 - Deceased: 13 March 2024
யாழ். வல்வெட்டித்துறை அப்பக்காத்து ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் 7200 கிரின்ஸ்ரெட் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரதாஸ் சண்முகராசா அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகராசா-சரோஜினிதேவி தம்பதியினரின் அன்பு மகனும்,
திரு. பெர்ணான்டோ-காலஞ்சென்ற கிருஷ்ணவதானா தம்பதியினரின் மருமகனும்,
இரதி அவர்களின் அன்புக்கணவரும்,
தரணிகா, தமயந்தி, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யமுனா, காஞ்சனா, குகதாஸ், செந்தில்குமரன் ஆகியோரின் சகோதரரும்,
சந்திரலிங்கம், துரைசிங்கம், சத்தியா, கோதை ஆகியோரின் மைத்துனரும்,
காயத்திரி, கார்த்திகா, கிருத்திகா ஆகியோரின் மாமனும், காருண்யன், பபியா ஆகியோரின் சித்தப்பாவும், சாதுர்யா அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று பார்வைக்காக மாலை 5.00 - 6.00 மணி வரை Solvej, 7200 Grindsted இல் அமைந்துள்ள Grindsted Sygegus Kapel இல் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 17-03-2024 காலை 10.00 மணியளவில் Olgodvej 40, 7200 Grindsted இல் அமைந்துள்ள Urup forasmlinguts இல் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
