Mrs Kumaravelu Thangammah
Deceased: 21 January 2020
யாழ் நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் 1 ஆம் ஒழுங்கை , அனிஞ்சியன் குளம், மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி குமாரவேலு தங்கம்மா நேற்று (21.01.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் குமாரவேலு (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குணசிங்கம், நடேசு ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
கேதீஸ்வரராணி (மகளிர் அபிவிருத்தி போதனா ஆசிரியர் - மாந்தை கிழக்கு பிரதேச செயலகம்), காலஞ்சென்ற கோகிலகுமாரி மற்றும் யௌவனகுமாரி (ஆசிரியர்- மூன்று முறிப்பு அ.த.க பாடசாலை வவுனியா), உதயகுமார் (அதிபர் - பாலைப்பாணி தமிழ் வித்தியாலயம்) காலஞ்சென்ற வினோத்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சோ.தேவதாசன் (ஓய்வுபெற்ற நிர்வாக கிராம சேவகர்), காலஞ்சென்ற கருணாநிதி மற்றும் சசிகலா (ஆசிரியர் - மு/யோகபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.01.2020) வியாழக்கிழமை மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அனிஞ்சியன் குளம் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
1ஆம் ஒழுங்கை மல்லாவி
தகவல்: குடும்பத்தினர்
+94 77 112 7277
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2020 09:46)
