Mr. Kumaravelu
Date of Birth: 20 August 1945 - Deceased: 13 April 2026
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தி, புதிய உயர் கல்லூரியின் பேராதனை, யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கான அரசறிவியல் மற்றும் பொருளியற் துறை முன்னாள் விரிவுரையாளரும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பொருளியல் விரிவுரையாளருமான திரு. குமாரவேல் அவர்கள் இன்று 13.04.2026 காலமானார்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர் தாயகப்பற்றாளரும் நீண்டகாலம் தமிழீழ விடுதலைக்கான அரசறிவியல் விரிவுரைகளையும் ஆற்றியவராவார்.
அன்னார் நாடறிந்த பட்டிமன்ற பேச்சாளரும், நடுவரும், ஆன்மீகச் சொற் பொழிவாளருமாவார்.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியான் மீது பற்றுக்கொண்டவர்.
சந்நிதியான் ஆச்சிரமத்தோடு நீண்டகாலம் இணைந்து சமய, சமூகப்பணிகளை ஆற்றியவர்.
பண்ணாகம் அம்பாள் கலை மன்றம் நடாத்திய வாணி விழாவில் பலமுறை பட்டிமண்டபத்திற்கு, கவியரங்கத்திற்கு தலைமை தாங்கியிருக்கிறார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
புதிய உயர் கல்லூரி நட்புகள் புதிய உயர் கல்லூரி
யாழ் பொன்னையா லேன் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு அப்பாத்துரை குமாரவேலு அவர்கள் 12-04-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அப்பாத்துரை கண்மணி தம்பதியிரின் பாசமிகு புதல்வனும்,
காலஞ்சென்ற பொன்னையா கண்மணிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற உமா மற்றும் அகிலன்(பல் வைத்திய நிபுணர் கிளிநொச்சி மாவட்ட வைத்தயசாலை), யாழினி(ஆசிரியை யாழ்ப்பாணக் கல்லூரி வட்டுக்ககோட்டை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கீர்த்தி( போதனா வைத்தியசாலை யாழ்ப்பணம்), கோகுலவாசன்(அதிபர் வட்டுக்கோட்டை சுப்பிரமணியம் வித்தியாசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், மனோரஞ்சிதம், முருகையா, தனலட்சுமி, சண்முகலிங்கம் மற்றும் தங்கலட்சுமி(கனடா), பாலபாஸ்கரன்(கனடா), இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற இராமநாதன்,மற்றும் வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குகவருண், மேதிரா, அக்ஷயா, ஐஸ்வரியா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-04-2026 புதன்கிழமை முற்பகல்10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2026 20:09)
