திருமதி. குமரேஸ்வரி வைத்திலிங்கம்
(இளைப்பாறிய ஆசிரியை - உரும்பிராய் இந்துக் கல்லூரி)
தோற்றம்: 18 ஆகஸ்ட் 1926 - மறைவு: 29 நவம்பர் 2025
யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வாழ்விடமாகவும், கொழும்பு - வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமரேஸ்வரி வைத்திலிங்கம் அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு - பானுமதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,
இரத்தின சபாபதி - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
வைத்திலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன் (கனடா), காலஞ்சென்ற குருபரன், செந்தில்மதி, செந்தில்செல்வி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
குமாரசந்திரன், காலஞ்சென்றவர்களான சகுந்தலா, சந்திராதேவி, மல்லிகாதேவி, கிருஸ்ணமூர்த்தி மற்றும் மீனாம்பிகை, சோதிமதி, சர்வேஸ்வரமூர்த்தி, வள்ளிநாயகி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரஸ்சிரிநாதன், ராஜதுரை, சேனாதிராஜா, சோடுநாதன், சிவரூபான், சிவசிதம்பரம், ஜெகன்நாதன் ஆகியோரின் மைத்துனியும்,
திலகா (கனடா), பரமசிவராஜா (இளைப்பாறிய ), வாமனானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி, சைத்திரியா, சுபாஞ்சலி, குகாஜினி, மஞ்சுதா, அஞ்சனா, காலஞ்சென்ற டினேஸ், பவித்திரா, அன்தனி, செந்தூரன், அரவிந்தன், ஆதவன், காலோஸ், சூரியா ஆகியோரின் அன்பு பாட்டியும்,
லூகஸ், ஒலிவியா, மிதுஷன், மேகன், லியம், டைலர் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
