திருமதி. குமுதினி சண்முகரெட்ணம்
தோற்றம்: 24 மே 1955 - மறைவு: 07 ஜூலை 2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா - Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. குமுதினி சண்முகரெட்ணம் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகரெட்ணம் (Mortgage Advisor) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற நெடுந்தீவு (உடையார்) கணபதிப்பிள்ளை - தங்கம் தம்பதியினரின் அன்புப் பூட்டியும்,
இளைப்பாறிய தபால் அதிபர்கள் சோமசுந்தரம் - ஞானமணி தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,
ஞானராஜா (இளைப்பாறிய அதிபர்) - கனகம் (ஆசிரியை) தம்பதியினரின் அன்பு மகளும்,
கணபதிப்பிள்ளை (இளைப்பாறிய அதிபர்) - பொன்னம்மா தம்பதியினரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜ்குமார் மற்றும் பாஸ்கரகுமார் (ஐக்கிய அமெரிக்கா), சுலோஜினி (கனடா), கேதீஸ்வரகுமார் (கனடா), ராகினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினி, கசில்டா, யோகநாதன், யசோதரா, வேலாயுதம், தியாகராசா, லெட்சுமி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லாவண்யா, சயந்தன், காண்டீபன், அர்ச்சணா, மாதவன், ஆத்மிகா, தெய்வீகன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
ஐஸ்வரியா, இசைவிழி, யாழினியன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கபிலன், பிரதீப், ஜோதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மைலன், மைதிலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 14-07-2025 திங்கட்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
